இலங்கையின் பொருளாதாரம் இந்தளவுக்கு பாதளத்தில் விழுந்தமைக்கு சீனாவின் திட்டங்களை பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்றக் குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாது.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அவ்வானதொரு நிலையில்  கடலை அண்மித்த 36,000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அவ்வானதொரு நிலையில்  கடலை அண்மித்த 36,000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.பல்வேறு சீன நிறுவனங்களும்  இலங்கை கடல் வளங்களை நீண்டகாலமாக கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக கடலட்டை பண்ணைகள் பெய்ஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும். சில ஊடக செய்திகளின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 டொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது. இந்த துறையில் சீன வணிக நிறுவனங்கள் பல தற்போது இலங்கையில் செயற்படுகின்றன.

தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட  சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் (Chunmanm Cultural Business Group) புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்கும் என சூழலியளாளர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் வடகடல் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்  கடலட்டை பண்ணைகளால், அந்தந்தப் பிரதேசங்களில் சிறு கடற்றொழிலை பரம்பரை பரம்பரையாக வாழ்வாதாரமாக  மேற்கொண்டு வந்த  குடும்பங்கள், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதேவேளை, கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள பண்ணையாளர்கள் சிலர், இதனால் அதிக வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு,  மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற மீனவ கிராமங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறுகடற்றொழிலாளர்கள், தமது வாழ்வாதாரத்தை இந்தக் கடலட்டைப் பண்ணைகள் ஆக்கிரமித்துள்ளன என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதேவேளை,  கிராஞ்சி கிராமத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துத் தருமாறும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றார்கள்.