கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பாதுகாவலராக இருந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) மைதானத்திற்கு வந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதுகாவலர் சடலமாக இருப்பதை அவாதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தும்மோதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய உபுல் சம்பத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.