பல குற்றங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை சுமார் 8 வருடங்களின் பின்னர் யால பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தலைமறைவாகியிருந்த போது கதிர்காமம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கதிர்காமம் காவல்துறையினரால் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யால வனப்பகுதியில் மறைந்திருந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைச் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நபர் வனவிலங்குகளை வேட்டையாடி பாரியளவில் சட்டவிரோதமாக இறைச்சி வியாபாரம் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும் இந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.