பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற ஜுலி காதலனை மிரட்டுவதற்கு செய்த காரியம் இறுதியில் பிரிந்து செல்லும் நிலை வரை சென்றுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜுலி, பின்பு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார்.
பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு செவிலியராக இருந்த இவர் அவ்வப்போது குறும்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்பு வீரத்தமிழச்சி என்ற பெயர் தரைமட்டமாகி ரசிகர்களின் வெறுப்பு மற்றும் திட்டும் வாங்கி வந்தார். பின்பு தொகுப்பாளராக பணியைத் தொடங்கி பின்பு படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்துள்ளார்.
அதன்பின்பு முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு மாடலிங் துறையிலிரும் பிஸியாகியுள்ளார்.
இந்நிலையில் ஜுலி கடந்த 4 ஆண்டுகளாக மனிஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். மேலும் மனிஷுக்கு தான் பல்சர் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஜூலி தனது காதலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், பொலிசார் மனிஷை விசாரித்துள்ளனர்.
விசாரணையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலிக்கும், அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது மனிஷ் ஜூலிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாகியுள்ளது.
தற்போது வேறொருவருடன் ஜூலி நட்பாக பழகிவருவதால் மனிஷ் உடனான காதலை அவர் துண்டித்துள்ளார். இந்நிலையில் மனிஷ் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறிய ஜுலிக்கு மனிஷ் அவர் வாங்கிக்கொடுத்த அனைத்து பொருட்களையும் திருப்பிக் கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்