மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீடுகளில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இனி எப்படி மிளகு வடை செய்வது என்று பார்க்கலாம்.

மிளகு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. உளுந்தம் பருப்பு – 200 கிராம்
  2. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயப் பொடி – சிறிதளவு
  6. நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

    மிளகு வடை செய்முறை

    உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.

    உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் அரைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

    உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும். சதுர வடிவ வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    அதில் உருட்டிய சிறிய உருண்டையை வைத்து வடையாகத் தட்டவும். வடையாக விரித்ததும் நடுவில் சிறுதுளையை இடவும்.

    மாவினை காய்ந்த எண்ணெயில் போடவும். சுவையான மிளகுவடை தயார்.