இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் பொப் மெனண்டஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் குரலைப் பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது என்றும், இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் எனவும் அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
காலதாமதமின்றி சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறும், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.