திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் இன்று(07) இரவு 6.30 மணியளவில் (மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் வயது( 30), ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் வயது (30 )ஆகிய இருவரும் பலத்து காயத்துக்குள்ளாகியுள்னனர்
இதில் படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.