தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி வகைகளுக்கு மாறி இருக்கிறோம்.

அதில் கருப்பு கவுனியும் ஒன்று.

இந்த கருப்பு கவுனி அரிசியை கொண்டு சத்தான புட்டு தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. கருப்பு கவுனி அரிசி உருண்டை
  2. கருப்பு கவுனி மாவு – 2 கப்
  3. தேங்காய்த்துருவல் – அரை கப்
  4. நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி – இனிப்புக்கேற்ப
  5. ஏலத்தூள் – தேவைக்கு
  6. நெய்- தேவைக்கு

செய்முறை

அகலமான பாத்திரத்தில் மாவை கொட்டி இலேசாக உப்பு தெளித்து கிளறவும்.

அதிகமாக தண்ணீர் சேர்த்தால் கட்டி தட்டி விடும். கட்டியில்லாமல் உதிர இருக்க வேண்டும். அதே நேரம் மாவு ஈரப்பதமாகவும் இருக்க வேண்டும்.

மாவை கட்டியில்லாமல் கிளறவும். அல்லது மாவு சல்லடையில் சலிக்கலாம். இப்போது மாவு தயார்.

தேங்காய் உடைத்து துருவிகொள்ளவும். மாவை வெள்ளைத்துணியில் இட்லி பானையில் ஆவி கட்டி வைக்கவும். அதன் மேல் தேங்காய்த்துருவல் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து வேகவைத்ததை மற்றொரு பாத்திரத்தி போட்டு இனிப்புக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து கிளறவும்.

இப்போது அப்படியே பரிமாறலாம். குழந்தைகள் புட்டு சாப்பிட அடம்பிடித்தால் இதை கிளறும் போது சிறிது நெய்விட்டு சூடு பதத்தில் இருக்கும் போதே உருண்டையாக பிடிக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சேர்த்து சாப்பிட முடியாது.

அவர்கள் வெங்காயம், பீன்ஸ், கேரட், கோஸ் என விரும்பும் காய்கறிகளை நறுக்கி மாவில் கலந்து விடவும். பிறகு நீர்விட்டு உருண்டையாக்கி இட்லி பானையில் அவித்து எடுத்தால் சூப்பரான உருண்டை தயார்.

இதற்கு தொட்டுகொள்ள கொத்துமல்லி சட்னி, தேங்காய் சட்னி இன்னும் சுவையை அதிகரிக்கும்.

நன்மைகள்

  1. கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை தடுக்கிறது.
  2. கொழுப்பை கரைத்து எடையை பல மடங்கு வேகத்தில் குறைக்க உதவி புரிகின்றது.
  3.  நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கருப்பு புட்டு உடல் பருமனை குறைக்கும்.
  4. நீரிழிவு இருப்பவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  5. உயர் இரத்த அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கிறது