தேசிய மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் 4 ம் இடத்தைப் பெற்று சக சிங்கள வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களிடம் பாராட்டைப் பெற்ற, கிளி/பளை மத்திய கல்லூரி மாணவன்.
நடைபெற்று வருகின்ற தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 51.40m தூரம் எறிந்து தேசிய மட்டத்தில் கிளி / பளை மத்திய கல்லூரி மாணவன் R. எழில் பிரியன் 4ம் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் junior ஆக இருந்த பொழுதும் சிங்கள போட்டியாளர்களுடன் சமமாக போட்டியிட்டு 4ம் இடத்தை பெற்று பார்வையாளர் அரங்கில் உள்ளவர்களிடமும் சக சிங்கள வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களிடமும் பாராட்டை பெற்றார் .
5வது சுற்று வரை இவர் 2வது இடத்தில் காணப்பட்டார்.
(3ம் இடம் பெற்றவீரர் 52m 2ம் இடம் பெற்ற வீரர் 53.20m ம் 1ம் இடம் பெற்ற வீரர் 55m எறிந்ததும் குறிப்பிடதக்கது )