நடிகர் விஜய்யின் கார் காப்பீட்டு காலம் முடிந்துவிட்டாக வெளியான சர்ச்சைக்கு அவரது மக்கள் தொடர்பாளர் ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் கருப்பு நிற முகக் கவசம் அணிந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்களிக்க தனது சிகப்புநிற மாருதி சுசுகி செலிரியோ காரில் வந்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கார் காப்பீட்டுக் காலம் முடிவடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. தற்போதுதான் விஜய்யின் காருக்கு வரிவிலக்கு கோரிய விவகாரம் முடிவுக்கு வந்தது. அதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையா என அவரது ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.
இதனிடையே நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் கார் காப்பீடு விவரங்கள் அடங்கிய தாளை பகிர்ந்து, அவரது கார் காப்பீ்ட்டு காலம் வருகிற மே 28, 2022 வரை இருப்பதாக குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்