சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு போதைப் பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட ஹட்டன், கொழும்பு, பலங்கொடை, பொகவந்தலா,நோர்வூட் மஸ்கெலியா, தியகல, நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதக்கய, ஹெரோயின், உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாயின் உதவியுடன் போதை பொருட்கள் வைத்திருந்த சுமார் 87 நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (25) சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக கேரள கஞசாவுடன் சென்ற மேலும், 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னலையில் இன்று ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்