அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் உள்ளூர் நேரப்படி காலை 8.30 க்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
எனினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
காலை நேரம் என்பதால், பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவர்கள் சிலர் ரத்த காயங்களுடன் வெளியே செல்வதையும் அவர்களுக்கு அங்கிருந்த சக பயணிகள் உதவி அளித்து வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.
முன்னதாக வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதாக சில செய்திகள் வெளியான நிலையில், செயல்பாட்டில் உள்ள வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று நியூயார்க் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது பயங்கரவாத செயலாக இருக்குமா? என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்