இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.
தமது கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.
எங்கள் போக்குவரத்துக் கட்டணங்களுக்கான விலைச்சூத்திரம் எங்களிடம் உள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் அதனை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் இறுதிக் கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையுடன், டயர் உள்ளிட்ட வாகன உதிரிப்பாகங்களின் விலையும் 300% வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எங்கள் மூன்று கோரிக்கைகளும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து இருந்து விலகுவதாக எமது செயற்குழு நேற்று இரவு கூடி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.