மிக இளம் வயதிலேயே தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர் ஜஸ்டின் பெய்பர்( Justin Bieber).
கனடாவைச் சேர்ந்த இவர் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் அவர் ”எனது முகத்தின் பாதியை செயலிழக்கச் செய்யும் ஒரு சிண்ட்ரோம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிண்ட்ரோம் ராம்ஸே ஹண்ட்ஸ் என சொல்லப்படுகிறது.
ஒரு வகை வைரஸால் உருவாகும் இப் பிரச்சனை நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது. நான் எனது அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களை இரத்து செய்துள்ளதால் பலரும் அதிருப்தி அடைந்து இருப்பீர்கள். என்னால் இப்போது உடல்ரீதியாக அதை செய்ய முடியாது.” என கூறியுள்ளார்.
மேலும் “ நான் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரை எனது சுற்றுப்பயணங்களை ஒத்தி வைக்கிறேன். இயல்பு நிலைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியவில்லை. உங்கள் அன்பையும் பிராத்தனைகளையும் கொடுங்கள்” என உருக்கமாக பேசியுள்ளார்.
இவ் வீடியோவானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.