சமீபத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. காட்டில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும், சிங்கம் சிங்கம் தான் என்பதை சிங்கத்தை சீண்டிய நபர் உணரும் நிலை ஏற்பட்டதை வீடியோவில் காணலாம்.
இதில் ஒரு நபர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டார். இந்த நபர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கூண்டில் கையை நுழைப்பதை வீடியோவில் காணலாம். அந்த நபர் சிங்கத்தைத் சீண்டும் நோக்கில், அதனை தொட முயன்றார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததோடு, சிங்கம் அவரது வலது கையை கவ்விப் பிடித்தது.
சிங்கம் தாக்கிய சம்பவம் செனகலில் உள்ள பார்க் ஹென் உயிரியல் பூங்கா என கூறப்படுகிறது. சிங்கத்தின் கர்ஜனையின் சத்தத்தில் காட்டின் கொடூரமான விலங்குகள் கூட நடுங்குகின்றன என்ற போது மனிதன் எம்மாத்திரம். சிங்கம் மனிதனை தாக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமூக ஊடகத்தில் (Social Media) வெளியான சமீபத்திய இந்த வீடியோவில், கூண்டில் அடைபட்ட சிங்கம் ஒரு மனிதனின் கையை தனது வாயில் கெட்டியாக கவ்விக் கொண்டிருப்பதைக் நீங்கள் காணலாம். மனிதனின் அலறல் சத்தத்தையும் கேட்கலாம்.
சிங்கத்தை சீண்ட நினைத்த நபர் தனது கைகளை மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறார். அதேநேரம் அருகில் இருந்த சிலர் கற்களை வீசி சிங்கத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்த போதும் சிங்கம் நகரவில்லை. இருப்பினும், சில நொடிகளில் சிங்கம் மனிதனின் கையை விடுவித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த வீடியோவை பார்த்த பிறகு யாரும் இப்படி ஒரு தவறை செய்ய நினைக்க மாட்டார்கள்.