இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி தமிழ் வீரரான மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான டக்ஸன் பியுஸ்லஸ் மாலைத்தீவில் உயிரிழந்துள்ளார்.
மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தபோது அவர் மரணமடைந்துவிட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.