கொழும்பு தாமரை கோபுரம் கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர் என தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூபா 268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாகவும், 4 ஆயிரத்து 83 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.