தாம் விரைவில் பதவி விலகப் போவதில்லை என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தாம் இருப்பதாகவும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
எதிர்கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரம் பதவி விலக தயார் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
வேறொருவர் ஆட்சியை பொறுப்பேற்று கட்டுப்படுத்தும் வரை காத்திருந்தால் நெருக்கடி மேலும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.