ஜா-எல மற்றும் ஹிங்குராங்கொட பிரதேசங்களில் புகையிரதத்தில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (30) அதிகாலை மற்றும் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடஹகபொல பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையில் ஔிச் சமிக்ஞை விளக்கு ஔிர்ந்த போதும் முச்சக்கரவண்டி ஒன்று புகையிரத கடவையை கடந்த போது , கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்துள்ள நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 31 வயதுடைய தெகட்டானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹிங்குராங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹடமுன பிரதேசத்தில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹிங்குராங்கொட – ஹதமுன பகுதியைச் சேர்ந்த 40 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.