பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவசரமாக பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.