பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதனூடாக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தது தெளிவாகியுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், அரசாங்கத்தின் தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுக்களை கூட்டுவதற்கு ஜனாதிபதிக்கோ, ஏனைய அரசியல்வாதிகளுக்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது.