பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நாளை திங்கட்கிழமை சந்திக்கவுள்ளனர்.

அண்மைய நாட்களில் மே-9ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளுடன் மக்கள் விடுதலை முன்னணியிருக்கு தொடர்புகள் இருப்பதாக கூறி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறித்து அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் பொலிஸ்மா அதிபருக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது, கைதுசெய்யப்பட்டவர்களில் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆழமாக அவதானம் செலுத்தவுள்ளனர்.

அத்துடன், சமூக வலைத்தளங்கள் மற்றும் தனி நபர்கள் ஊடாக மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இவ்விதமாக பரப்பபட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.