நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் இந்த பேரணி இடம்பெறும் போது, அப்பகுதிக்கு எதிர்ப்பு பேரணிகளை நடாத்த தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்காத நிலையில் இவ்வாறு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.