எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லையென கூறி வீதிகளை மறித்தோ அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படும் வகையிலோ செயற்பட்டால், எரிபொருள் விநியோகச் செயற்பாடுகள் சரிவை சந்திக்கும் எனவும், அடுத்த வாரத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்