மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயு கோரி நேற்று (23) பிறபகல் லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 400 பேருக்கு அன்றைய தினம் எரிவாயுக்கள் வழங்கப்பட்டன.
வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள், எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலை வரை காத்திருந்து வீடுகளுக்குச் சென்றனர்.
மறுநாள் சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படுமென அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர். ஆனால், அன்றும் எரிவாயு வழங்கப்படாதைதயடுத்து, தொடர்ந்து இரவு – பகலாக நேற்று வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (23) முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயுக்களை வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கி முடித்தனர். எனினும், வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாத நிலையில் எரிவாயு தந்தால் தான் லொறி இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியுமென லொறியை வெளியேற விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்