விராட்கோலி, அனுஷ்கா சர்மா ஜோடி எங்கள் குழந்தையை வெளியயே காட்டமாட்டோம் என கூறிய நிலையில் நேற்றைய போட்டியில் மகளை அனுஷ்கா சர்மா காட்டி கொண்ட்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய நட்சத்திர வீரரான விராட்கோலி, அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் பிறந்த நிலையில், வாமிகா என பெயரிட்டனர்.
மேலும், வாமிகாவை தனியுரிமையை வழங்கவும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்கவுமே அவரது முகத்தை வெளியிடவில்லை என அனுஷ்கா சர்மா கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதன் முறையாக தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி விளையாடுகையில், கோலியின் அரைசதம் காட்டியபோது, மகளுடன் அனுஷ்கா சர்மா கைதட்டி வரவேற்றார்.
அதற்கு, கோலியும், தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார். ப்போது தான் வாமிகாவின் முகத்தை ரசிகர்கள் முதன்முதலில் பார்த்தனர். இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/MrVicky184/status/1485292780402266114/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485292780402266114%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fanushka-sharma-daughter-viral-video-virat-vamika-1643003129