என்னுடைய வயது 47. அடிக்கடி வாயுவினால் ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, முதுகு வலியால் அவதிப்படுகிறேன்.இது எதனால்? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?.

உள்ளும் புறமும் எண்ணெய்ப் பசையை என்றென்றும் பாதுகாக்கக் கூடிய உணவும் செயலும் நமக்கிருந்தால், நீங்கள் குறிப்பிடும் வகையிலான உபாதைகள் தோன்ற வாய்ப்பில்லை. உளுந்தும், எள்ளும் எண்ணெய் வித்துகளில் சிறந்தவை. அவற்றை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். தினமும் சிறிது சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய்யை உடலில் தேய்த்துவிட்டு பிடித்துவிடும் மசாஜ், உடலுக்கும் தசைநார்களுக்கும் வலுவூட்டும்.

நீங்கள் குறிப்பிடுவது போல ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, மார்பு வலி, விலாப்புறங்கள் வலி, முதுகு வலி, சந்துகள், தசைநார்களில் வலி, வீக்கம், கைகால் வலி முதலிய எல்லாவிதமான வலிகளையும் நிச்சயமாகக் குணப்படுத்தும் வகையிலும், ஸர்வாங்க வாதம், பாரிச வாயு முதலிய எல்லாவிதமான வாத நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்து இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து நரம்புகள் சம்பந்தப்பட்ட விரல் நடுக்கம், நாக்குக் குளறுதல், கண், காது கோளாறுகள், ஒரு பக்கத் தலைவலி முதலிய கோளாறுகளையும் குணப்படுத்தும் திறன் உள்ளது.