கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 7 பேரும் நேற்று (26)இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 13ஆம் திகதி இதே கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.