பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 147 சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 11,162 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ‍மொத்தம் 15,685 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் மேல் மாகாணத்தில் நடமாடும் ரோந்து மற்றும் வீதித் தடைகள் அமைத்து தினசரி நபர்கள் மற்றும் வாகனங்களின் செயற்பாடுகளை சோதனையிடவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்