ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தடுக்கும் வகையில் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பிராங்க் குணவர்தன மற்றும் நீதிபதி எம். பி. சமத் மொரேஸ் என்ற நீதிபதிகள் கொண்ட குழு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.