ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் இடையிலான பேச்சுக்கள் மோதல் போக்கானவையாகக் காணப்படுகின்றபோதும் முன்னகருவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி நேற்றுத் தெரிவித்துள்ளார்.
மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கெதிராக மேற்குலகமானது மேலதிக தடைகளை அறிவிக்கத் திட்டமிடுகையிலேயே இக்கருத்து வந்துள்ளது.
இந்நிலையில், துறைமுகநகரான மரிபோலில் வீதிச் சண்டைகளும், குண்டுத் தாக்குதல்களும் கடுமையாக இடம்பெற்று வருகின்றன