கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யுகதானவி அனல் மின் நிலைய ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான இரண்டாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றம் நிறைவு பெற்றது.
இந்த மனுக்கள், இன்று முற்பகல் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, இந்த மனுக்கள் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிரணாமப் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 2022 ஜனவரி 10ஆம் திகதி வரை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டனர்.