பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் , தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஃப்ளோரிடா நோக்கி பயணித்த விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பயணியையே அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.