தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.