இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2820579701744509&output=html&h=250&slotname=9884828376&adk=3556369904&adf=2589558187&pi=t.ma~as.9884828376&w=300&lmt=1672677171&rafmt=12&format=300×250&url=https%3A%2F%2Fathavannews.com%2F2023%2F1318384&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTA4LjAuNTM1OS4xMjUiLFtdLGZhbHNlLG51bGwsIjY0IixbWyJOb3Q_QV9CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTA4LjAuNTM1OS4xMjUiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMDguMC41MzU5LjEyNSJdXSxmYWxzZV0.&dt=1672677170873&bpp=50&bdt=704&idt=339&shv=r20221207&mjsv=m202212080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da47eb324688483b7-223d8a4addd8003e%3AT%3D1670947133%3ART%3D1670947133%3AS%3DALNI_Mad7Sgc3mgJUBJhQI4dEHTGyrGo0w&gpic=UID%3D00000b8fe8c61261%3AT%3D1670947133%3ART%3D1672676453%3AS%3DALNI_MaYGZdmBUoZi44PUpiqYmXTSmvRAQ&prev_fmts=0x0&nras=1&correlator=8143049496747&frm=20&pv=1&ga_vid=143660999.1670947133&ga_sid=1672677171&ga_hid=1153641395&ga_fc=1&u_tz=330&u_his=15&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=555&ady=1000&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C44777508%2C31071277%2C44780792&oid=2&pvsid=1429547796748019&tmod=1178246122&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fathavannews.com%2Fcategory%2Fcinema&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=256&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=XbH430SiEa&p=https%3A//athavannews.com&dtd=355
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
கவனம் ஈர்க்கும் போஸ்டர்.. புஷ்பா படக்குழு ‘புஷ்பா’ படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது.
இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.
இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
புஷ்பா இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.