பிரபல மலையாள நடிகர் `கோட்டயம் பிரதீப்` தனது 61 ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக கொச்சியில் நேற்று முன்தினம் (17 ) காலமானார்.
கடந்த 2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான இவர் அதன் பின்னர் ‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்