றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.