புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத்தகவலில் (status) முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக நிலைத்தகவலில் (status) எதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை (லிங்க்) பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தையும் (preview) காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
முதல்கட்டமாக இந்த வசதியை ஐஓஎஸ் பயனர்களுக்கு சோதனை செய்தபின், அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இனி ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்புகளைக் கூட அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையிம் மீண்டும் ஓர் வசதியை அறிவித்துள்ளது.