விலைவாசி உயா்வு, வேலை வாய்ப்பின்மையைக் கண்டித்து மே 25 முதல் 31 ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடா்பாக அந்தக் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலியம் பொருள்களின் விலை 70 சதவீதம், காய்கறிகள் விலை 20 சதவீதம், சமையல் எண்ணெய் விலை 23 சதவீதம், தானியங்கள் விலை 8 சதவீதம், கோதுமை விலை 14 சதவீதத்துக்கு அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) அதிகரித்துள்ளது.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதுடன் பட்டினிக் கொடுமையும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், வேலைவாய்ப்பின்மையும் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது.
எனவே விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து மே 25 முதல் 31 ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தை மாநிலங்களில் உள்ள கட்சிக் கிளைகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் பொதுச் செயலா் தேவவிரத விஸ்வாஸ், புரட்சிகர சோஷலிஸ கட்சி பொதுச் செயலா் மனோஜ் பட்டாச்சாா்யா, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்