iPhone Toddler resistance விளம்பரத்தைப் பார்க்கப் பார்க்க உயிரோட்டமுள்ள அழகின் மகிழ்ச்சி என்னை ஈர்த்துக் கொள்கிறது. Chitty bang பாடலுடன், பெரிய சட்டை போட்ட, dusky ஆன சுருட்டை முடிக் குழந்தை ஒன்று ஐஃபோன் 13 ஐ தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் கியூட்டாகக் கத்திக்கொண்டு ஓடுவதும், ஒருபக்கம் சட்டை தோளை விட்டு சாய்ந்திருப்பதும், இறுதியில் ஐஃபோனை கீழே போட்டு மிதித்துக்கொண்டு வேறு ஏதோ ஒன்றின் மீது ஈர்ப்புக்கொண்டு ஓடுவதுமென நல்ல உயிரோட்டமுள்ள விளம்பரம்.