எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் வாகன போக்குவரத்து கும்புக்க பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி பிரதேசவாசிகளினால் வீதி மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.