இன்றைய காலக்கட்டத்தில் நரை முடி காணாத பெண்கள் ஆண்களையே காண முடியாது. தவறான உணவுப்பழக்கம், மாசுப்பாடு காரணம், வைட்டமின் காரணம் என பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.

வெள்ளை முடியை மறைக்க பலரும், ஹேர் டை அல்லது ஹேர் கலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், தொடர்ந்து ஹேர்-டையை பயன்படுத்துவதால், பல வகையான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

இதனால் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் இயற்கையான முறையில் நரை முடிக்கான தீர்வை எப்படி பெறுவது என அறிந்து கொள்ளலாம். பிளாக் டீ மூலம் எப்படி தலைமுடியை கருமையாக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

பொதுவாக ப்ளாக் டீயில் டானிக் அமிலம் உள்ளது. இதனால் இவை இயற்கையாக தலைமுடியை கருமையாக்க உதவுகிறது. முதலில் சுமார் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 முதல் 6 தேக்கரண்டி தேயிலை இலைகளை போடவும். இப்போது இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

அதன் பின் உங்கள் தலைமுடியை நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.

அடுத்ததாக, முடியை கருமையாக்க ப்ளாக் டீயோடு, ப்ளாக் காபியையும் பயன்படுத்தலாம். இதற்கு காபி பவுடரை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதில் மூன்று கருப்பு தேநீர் பைகளை போட்டு நன்கு கொதித்ததும் சிறிது நேரம் ஆறவிடவும்.

பிறகு ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியில் சுமார் 1 மணி நேரம் விடவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும்.

இறுதியாக, ப்ளாக் டீயோடு துளசியை சேர்த்து பயன்படுத்தவும், இதற்கு 1 கப் தண்ணீரில் 5 டீஸ்பூன் டீ போடவும். அதன் பிறகு, 5 முதல் 6 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதன் பிறகு, கலவையை உங்கள் தலைமுடியில் சிறிது நேரம் விடவும். பிறகு சாதாரண நீரில் முடியை நன்கு அலசவும்.