கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் ஆறாவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

24 மணி நேரத்தில் புதிதாக 219,126 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக 200,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடுத்த சில வாரங்கள் கடினமாக இருக்கும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 232,200 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட அதிகமான கட்டுப்பாட்டு மற்றும் சுகாதார நடவடிக்கைகளின் அவசியத்தை இம்மானுவேல் மக்ரோன் தனது புத்தாண்டு உரையில் குறிப்பிடவில்லை.