இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள்
இலங்கைக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் இலங்கைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுவதற்கு அந்த நிதி உத்தரவாதம்…
நீச்சல் தடாகத்தில் இருந்து கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் மீட்பு
பல நாட்களாக மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள அவரது ஆடம்பரமான மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த…
கொழும்பு பங்கு சந்தை 12 மணியுடன் நிறைவு
நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது
எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம்…
சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட ஆணையாளராக மேலதிக அரச அதிபர் நியமனம்!
இலங்கை சாரணர் சங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது சாரணிய சேவையினைப் பெறுப்பேற்றுக்கொண்டார் . இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் திரு. ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய ஆணையாளரிடம்…
ஜனவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1 இலட்சமாக அதிகரிப்பு!
2023 ஜனவரியில் 1 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து…
2023 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களின் தரவரிசை வெளியீடு
2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது. இந்த…
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் நாளை
பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஜனாதிபதி…
பரீட்சை மேற்பார்வையாளருக்கு எதிராக மாணவி முறைப்பாடு!
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக மாத்தளை காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, அங்கு பரீட்சை மேற்பார்வை கடமையிலிருந்த இருந்த ஆசிரியர் ஒருவரிடம் மேலதிகமாக…