தலைமன்னார் பகுதியில் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை பிரிவினரால் 4 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் பிரதிப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் பகுதியில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.