Author: admin

ஆபாச காணொளி, நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான…

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்கு அமைய ஒருவரின் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு சராசரியாக 17,014 ரூபாவாக…

பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க தடை

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை…

கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறைவடைந்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேவேளை, பெப்ரவரியில்…

தடுப்பூசியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்வத்தில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 12 மற்றும் 13 வயதுடைய…

சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய…

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால்  தாக்கல்…

கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை

கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்தார். கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.…

சீனாவின் ஒத்துழைப்பு தொடரும்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சிறப்பான ஈடுபாட்டை தொடரப்போவதாக சீனா தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில்…