பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் , அதில் கலந்து கொள்வதற்கும் குமாரவின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இலங்கை வரவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்படுகிறது..

பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணம் குறித்து இலங்கை அரசின் அபிப்பிராயம் கோரப்பட்டுள்ளதாகவும் , அவரின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடாத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பாதுகாப்பு மற்றும் இதர முன்னேற்பாடுகள் உறுதியாகுமானால் , இம்ரான் இலங்கை வருவாரென சொல்லப்படுகிறது.

சிலவேளை இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் , பின்னர் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வந்து , கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பாரென மேலும் அறியமுடிந்தது