அவசரகால சட்டம் அமுல்!
இன்று நள்ளிரவிலிருந்து அமுலாகும் வரையில் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனம்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு
இன்று நள்ளிரவிலிருந்து அமுலாகும் வரையில் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனம்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு
இன்று மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே 02ஆம் திகதி பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்
தாம் விரைவில் பதவி விலகப் போவதில்லை என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தாம் இருப்பதாகவும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார். எதிர்கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரம் பதவி விலக தயார் எனவும்…
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார். மேற்குறித்த விவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்…
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவசரகால பிரகடனத்தை இரத்து செய்தார்
அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்தார்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.