பிரித்தானியாவில் கொவிட்-19 ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு சாத்தியமில்லை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஜனவரிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கெதிரான ஆற்றலை உடலில் பெருக்கிக் கொள்ள முடியுமென நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மாறுபட்ட வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும், அதேநேரம் பொதுமக்கள் மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.