லிபியாவில் 50 வருடங்களுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்தவராக மோமர் அல் கடாபி கருதப்படுகிறார்.

அதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு அவர் கிளர்ச்சிப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை அந்நாட்டில் தற்போது முகமது அல் மெனிபி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார்.

இந்நிலையிலேயே அங்கு புதிய ஜனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி, வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தந்தை மீதான குற்றச்சாட்டுக்களைக் காரணம்காட்டி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அந்நாட்டின் தேர்தல் ஆணையகத்தால், கடாபியின் மகனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் அந்நாட்டின் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கை விசாரணை செய்த மேல்நீதிமன்றம், தேர்தல் ஆணையகத்தின் முடிவை இரத்துச் செய்து உத்தரவிட்டதுடன், கடாபியின் மகன் தேர்தலில் போட்டியிடவும் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.